9/18/2010 11:06:54 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிசின் நடிகை பிரச்னையால் 'கார்டு' படம் ரிலீசில் சிக்கலிருக்காமே; என்ன செய்யப்போறீங்க'ன்னு டைரக்டர்கிட்ட நிறையபேர் கேக்கறாங்களாம்… கேக்கறாங்களாம்… அவரோ, 'அதுபத்தி எனக்கு தெரியாது, படத்தை முடிச்சு கொடுக்கறதுதான் என் வேலை'ன்னு எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்… இதை கேள்விபட்ட தயாரிப்பு ரிலீஸ் விஷயத்துல யாரும் சப்போர்ட் பண்ணாம தனியா விட்ருவாங்களோன்னு பயத்துல இருக்காராம்… பயத்துல இருக்காராம்…
பவர் பேரோட நடராஜர் நடனம் ஆடும் ஊர் பெயரையும் சேர்த்து வச்சிருக்கிற இயக்குனரு தயாரிச்ச படங்கள் அவரது கைய சுட்டுட்டதால பைனான்ஸ் பிரச்னைல இருக்கா றாம்… இருக்காராம்… விட்ட துட்டை புடிக்கற வெறி அதிகமாயிட்டதால பெருமாள் பேர் கொண்ட இயக்குனர்கிட்ட படத்தை இயக்க சான்ஸ் கேட்டிருக்காராம்… சான்ஸ் கேட்டிருக்
காராம்…
போதை பிரச்னை டோலிவுட்ல டமார் டுமீர் ஆனதையடுத்து, அதை விட்டுடுவாங்கன்னு நினைச்சா, சில பார்ட்டி நடிகைகள் வாட்டர் மோகத்துல அநியாயத்துக்கு அலையுறாங்களாம்… அலையுறாங்களாம்… இதுல புதுசா சமீபத்துல அறிமுகமாயிருக்கிற சமந்த நடிகையும் சேர்ந்திருக்கிறாராம்… சேர்ந்திருக்கிறாராம்… டோலிவுட்ல நடந்த பார்ட்டியில நடிகை ஓவராகி விழுந்துட்டாராம்… பிறகு அவரோட நடிச்ச நடிகருதான் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போனாராம்… போனாராம்….
Post a Comment