கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!

|

Kamal Hassan
கமல் ஹாஸன் நடித்துள்ள 4 பிரண்ட்ஸ் மலையாளப் படம் இன்று கேரளாவில் வெளியாகிறது.

சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெயராம், ஜெயசூர்யா மற்றும் குஞ்சக்கோ போபன் நடித்துள்ள இந்தப் படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாஸன் நடித்துள்ள மலையாளப்படம் இது. நடிகர் கமலாகவே இந்தப் படத்தில் வருகிறாராம்.

“இந்தப்படத்தை தனது மலையாள நண்பர்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் விரும்பிச் செய்திருக்கிறேன்” என்று கமல் கூறியது நினைவிருக்கலாம்.

எம் ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படம், இன்று கேரளா முழுவதும் வெளியாகிறது.


 

Post a Comment