கால்ஷீட் சொதப்பல்:அமரா படத்திலிருந்து தூக்கப்பட்டார் ஓவியா!

|

Oviya
களவாணி என்ற ஒரே படத்தில் படுபாப்புலரான (அந்த ‘ஸ்ப்ரே’ மேட்டராலும்தான்!) ஓவியா, கால்ஷீட் விவகாரத்தில் சொதப்பியதால் ஒரு பதிய படத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

களவாணியில் நிறையப் பேரி்ன் மனசைக் களவாடியவர் நடிகை ஓவியா. அந்தப் படத்தின் வெற்றியால் செவனு உள்பட 5 புதிய படங்களில் ஒப்பந்தமானார்.

ஒளிப்பதிவாளர் – இயக்குநர் ஜீவன் இயக்கவிருந்த அமரா என்ற படத்திலும் இவர்தான் நாயகி.

ஆனால் சொன்னபடி கால்ஷீட் தராமல் சொதப்பிவிட்டாராம் ஓவியா. களவாணிக்கு சொந்தமான ஒருவர், ஓவியாவையும் சொந்தம் கொண்டாடியபடி இருப்பதால், கால்ஷீட்டில் கவனம் செலுத்த முடியவில்லையாம் ஓவியாவால்.

பொறுத்துப் பார்த்த ஜீவன், திடீரென்று ஒரு நாள் படத்திலிருந்தே ஓவியாவைத் தூக்கிவிட்டதாக அறிவித்துள்ளார். அட்வான்ஸைத் திருப்பித் தருமாறு கடுமையாகக் கூறிவிட்டாராம்.

வளர்ந்து வரும் நேரத்தில், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே ஓவியா!

 

Post a Comment