முதல்வர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் 'இளைஞன்Õ. பா.விஜய் ஹீரோ. மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா நடித்துள்ளனர். படம் பற்றி பா. விஜய் கூறியது: ஷூட்டிங்கிற்காக கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலை தேவைப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று பார்த்தோம். அது திருப்தி தரவில்லை. அதனால் சென்னை, பெரம்பூர் பின்னி மில்லில் செட் போட்டு படமாக்க முடிவு செய்தோம். அந்த பணியை ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி சிறப்பாக செய்திருக்கிறார். பிரமாண்ட கப்பல் தொழிற்சாலை அரங்கு போடப்பட்டது. கதையே இங்குதான் நடக்கிறது. தொழிற்சாலை அரங்கம், அதற்குள் அலுவலக அறைகள் மட்டுமின்றி, 3 மாடி கொண்ட கப்பலும் செட்டாக போடப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Post a Comment