10/5/2010 5:22:30 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
நட்பான நடிகை அவுட்டோருக்கு போனா, அவரோட மேக்அப்மேனை ஷூட்டிங்ல வேவு பார்க்க சொல்றாராம்… சொல்றாராம்… செல்போன் நம்பரையும் அடிக்கடி மாத்துறாராம். ரசிகர்கள்னு சொல்லி, சிலர் தொல்லை தர்றாங்களாம்… தர்றாங்களாம்… அதனாலதான் எங்கே போனாலும் எச்சரிக்கையா இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
பிரகாசமான ஹீரோவுக்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வருதாம்… வருதாம்… ஆனா எல்லாமே பல ஹீரோ கதையாம். முக்கியத்துவமும் குறைவா இருக்காம். 'வர்மா டைரக்டரோட படத்துல நடிக்கணும்னு ஆசை இருந்ததால நடிச்சேன். தொடர்ந்து இந்தியில நடிக்க மாட்டேன்'னு ஹீரோ எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்…
தமிழ், தெலுங்குல காதல் கிசு கிசுவால கல்லூரி நடிகை ரொம்பவே நொந்து போயிட்டாராம்… நொந்து போயிட்டாராம்… யாராவது இதை பற்றி கேட்டா, டென்ஷன் ஆகிப்போறாராம். மனசை தேத்துறதுக்கு ஒரே வழி யோகாதான்னு சில நடிகைங்க காதுல ஓதுனாங்களாம். அதனால இப்போ கல்லூரி நடிகையும் யோகா பிரியை ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…
Post a Comment