பிகினி டிரெஸ் அணிவதால் படம் ஓடாது என்றார் லேகா வாஷிங்டன். தமிழில், 'ஜெயம்கொண்டான்' படத்தில் நடித்த லேகா, இப்போது இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: 'பீட்டர் கயா காம் சே' என்ற இந்தி படத்தில் பிகினி டிரெஸ் அணிந்து நடித்திருக்கிறேன். இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. எனக்கு எந்த உடை மீதும் வெறுப்பில்லை. கதைக்கு தேவை என்றதால் நடித்தேன். அதே போல பிகினி அணிவதால் படம் ஹிட்டாகிவிடும் என்பதில் அர்த்தமில்லை. கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்கள் ஓடும். இந்த படத்தை அடுத்து 'பவர்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறேன். இதில் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், கங்கனா ரனவத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இருந்தாலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழில் 'வ' படம் ரிலீசாக இருக்கிறது. கன்னடத்தில் நடித்துள்ள 'ஹுடுகா ஹுடுஹி' ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் தியான் ஜோடியாக நடித்துள்ளேன். சதாவும் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment