9/25/2010 10:29:01 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
'ஜூனியர் பிசின் நடிகை'ன்னு யாராவது பூரண நடிகையப் பார்த்து சொன்னா கடுப்பாயிடுறாராம்… கடுப்பாயிடுறாராம்… 'நான் நான்தான்.. அவர் அவர்தான்'னு பளிச்சுன்னு சொல்றாராம்… சொல்றாராம்… ஒரு டி.வி பேட்டியில பிசின் நடிகை, 'பச்சையா இருக்குற பட்சிங்க எல்லாம் கிளியாயிட முடியாது'ன்னு சொன்னதுதான் கடுப்புக்கு காரணமாம்… காரணமாம்…
புதுமையின் மாஜி மனைவியான ராமன் ஜோடி நடிகை, தன் புது காதலரோட ஒரே வீட்டுல வாழ்ந்தாலும் காதலருக்கு மாஜி மனைவிகிட்டேருந்து டைவர்ஸ் கிடைக்காததால கல்யாணம் பண்ணிக்க முடியாம தவிக்குறாராம்… சீனியர் நடிகை தவிக்குறாராம்… டைவர்ஸ் கிடைச்சதும் தடபுடலா கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காராம்… முடிவு பண்ணியிருக்காராம்…
ஒத்தபாட்டுக்கு ஆடினா அப்படியே முத்திரை குத்திடறதான்னு ராய் நடிகை ரொம்பவே ஆவேசப்படறாராம்… ஆவேசப்படறாராம்… வர்றவங்க எல்லாம் அதேமாதிரி ஆடிக்கொடுங்கன்னு கேக்கறாங்க. பாலிவுட்ல யெல்லாம் இப்படி இல்ல. ஒரு படத்துல குத்தாட்டம் ஆடினாலும் அடுத்த படத்துல ஹீரோயின் வேடம் தர்றாங்க. அந்த டிரண்ட் கோலிவுட்டுக்கும் வரணும்ன்னு பேசவரவங்ககிட்ட பாயறாராம்… பாயறாராம்…
Post a Comment