எந்திரனை பாராட்டி ஷங்கருக்கு பாலசந்தர் கடிதம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எந்திரனை பாராட்டி ஷங்கருக்கு பாலசந்தர் கடிதம்!

10/12/2010 10:33:10 AM

இந்திய திரையுலக வரலாற்றி மாபெரும் வெற்றி எந்திரன் படத்தை பலர் பாராட்டி வந்துள்ள நிலையில், இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஷங்கருக்கு பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஒருவேளை இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினி, முதல்நிலை நாயகி ஐஸ்வர்யா ராய், ஏராளமான வாய்ப்பு வசதிகள் என அனைத்தையும் என்னிடம் கொடுத்து படமெடுக்கச் சொல்லியிருந்தால்கூட எந்திரனைப் போன்ற ஒரு படைப்பை தந்திருக்க முடிந்திருக்காது. ரசிகர்கள் கைத்தட்டும் விதமாக ஒரு படம் வேண்டுமானால் கொடுத்திருப்பேன். ஆனால் இப்படி ஒரு உலக சினிமாவை தந்திருக்க முடியாது. கத்தியின் மேல் நடப்பதைப் போல, மிகத் திறமையாக பாலன்ஸ் செய்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.

ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன். என்று எழுதியுள்ளார்.

மேலும் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும், எந்திரனை இந்தியாவின் அவதார், மற்றும் சன் பிக்சர்ஸை இந்தியாவின் எம்ஜிஎம் என்றும் பாராட்டியுள்ளார். இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், என் வாழ்க்கையில் நான் பெற்ற முக்கிய பாராட்டு இது என்றார்.

எந்திரனை பாராட்டி ஷங்கருக்கு பாலசந்தர் கடிதம்!


Source: Dinakaran
 

Post a Comment