இந்த ஆண்டு 'சக்குளத்து அம்மா' விருது பிரபல சினிமா பின்னணி பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது. கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோயில்களில் சக்குளத்து பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த பொங்கல் விழாவின்போது, சக்குளத்து பகவதி கோவில் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட விருது, பிரபல சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு வழங்கப்பட்டது. கோயில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக்குளத்து பகவதி அம்மன் கோயில் அறக்கட்டளை நிர்வாகி மணிக்குட்டன் நம்பூதிரி, 'சக்குளத்து அம்மா' விருதை சித்ராவுக்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கே.கே.கோபாலகிருஷ்ணன் நாயர், மணக்கால கோபாலகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் காவும்பாகம், கே.சதீஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran
Post a Comment