நான் கொடுத்த கால்ஷீட்டைப் பயன்படுத்தாமல், வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இதனால் அவரும் நானும் நண்பர்களாகப் பிரிகிறோம், என்றார் நடிகை த்ரிஷா.
சிம்பு- திரிஷா ஜோடியாக நடித்து தமிழில் ஹிட்டான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் கவுதம்மேனன்.
கதாநாயகனாக பிரதீக் பப்பர் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக திரிஷாவையே நடிக்க வைப்பதாக அறிவித்தார். படவேலைகள் விறுவிறுப்பாக நடந்தன.
இந்த நிலையில் திரிஷா திடீரென்று அப்படத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதனை கவுதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, ஆடிப்போய்விட்டார் த்ரிஷா. அதுமட்டுமல்ல, அவருக்கு பதிலாக மதராசபட்டணம் எமியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பையும் துவங்கப் போகிறாராம்.
திரிஷாவை தூக்கியதற்குக் காரணம், அவரது ‘காட்டாமிட்டா’ இந்தி படம் படுதோல்வியடைந்ததுதான் என்கிறார்கள்.
“விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் கதையில் இந்திக்கு ஏற்றார்போல் சில மாற்றங்கள் செய்துள்ளாராம் கவுதம். காதலியைத் தேடி நாயகன் லண்டன் போவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு எமி பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்வு செய்துள்ளதாக கவுதம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து திரிஷாவிடம் கேட்டபோது, “கவுதமும் நானும் நண்பர்களாகப் பிரிய முடிவு செய்துள்ளோம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்டோபர் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கவுதமுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை.
நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பை துவங்கப் போகிறாராம். ஆனால் என்னிடம் எதுவும் கூறவில்லை. அந்த நேரத்தில் நான் அஜீத்தின் மங்காத்தா படத்திலும், பவன் கல்யாணின் குஷிகா படத்திலும் பிசியாக இருப்பேன். எனவே என்னால் நடிக்க இயலாது,” என்றார்.
Post a Comment