10/9/2010 10:28:54 AM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
பாடல் பாடுறதை விட தொகுப்பாளினி சான்ஸ்தான் மயி பாடகிக்கு அதிகம் கிடைக்குதாம்… கிடைக்குதாம்… மனம் தளராம வர்ற வாய்ப்பை சாதகமா பயன்படுத்திக்கிறாராம்… சாங் ரிலீஸ் நிகழ்ச்சியில தொகுப்பாளினியா மைக்கை
பிடிச்சதும் அங்க வர மியூசிக் இயக்கங்ககிட்ட பாடறதுக்கு சான்ஸ் கொடுங்கன்னு பகிரங்கமாகவே கேட்கிறாராம்…
கேட்கிறாராம்…
சோனி நடிகைக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸெல்லாம் மறந்து போச்சாம்… மறந்து போச்சாம்… கேமரா முன்னால நின்னா மாஸ்டர் தரும் மூவ்மென்ட்சை வேகமா செய்ய முடியாம திணறிப்போறாராம்… ரீ என்ட்ரிக்கு பிறகு மல்டி ஹீரோயின் படங்கள்லதான் வாய்ப்பே வருது. அந்த சான்ஸ் கூட டான்ஸ் குறைபாட்டால கை நழுவிடக் கூடாதுன்னு உஷரா இருக்காறாம். தினமும் டான்ஸ் மாஸ்டரிடம் நம்மூர் குத்துப்பாட்டுக்கான வேகமான ஆட்டத்தை கத்துக்கிறாராம்… அம்மணி கத்துக்கிறாராம்…
ஓவிய நடிகையோட செல்போன் நம்பர், ரசிகர்களுக்கு எப்படியோ லீக் ஆனதுல அப்செட்டா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… நேரங்கெட்ட நேரத்துல யாராவது போன் பண்ணி, ஏடா கூடமா பேசித் தொலைக்கிறாங்களாம்… தொலைக்கிறாங்களாம்… இதனால புதுசா ஒரு நம்பர் வாங்குனாரு நடிகை… அதுவும் அங்க இங்கன்னு லீக் ஆகி, நடிகையை இன்னும் அப்செட் பண்ணிடுச்சாம்… பண்ணிடுச்சாம்… இதனால இன்னொரு நம்பரை வாங்கி ரகசியமா வச்சிருக்காராம்… ஆனா, அவரு நடிக்கும் படத்து இயக்கங்கதான் இப்ப டென்ஷன்ல இருக்காங்களாம்… எந்த நம்பரை தொடர்புகொண்டாலும் ரீச் ஆகலையாம்… நடிகையை எப்படி புடிக்கிறதுன்னு தெரியாம பெரும் குழப்பம் நடக்குதாம்… ஷூட்டிங் ஸ்பாட்ல குழப்பம் நடக்குதாம்…
Post a Comment