குலசேகரத்தில் நடந்த நடிகர் கரணின், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பில் மர்ம கும்பல் புகுந்து ரகளை செய்ததால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது.
வடிவுடையான் இயக்கும் இப்படம், குமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவமாம். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்று ஷூட்டிங் ஆரம்பித்த உடனே, திடீரென்று மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. அந்த கும்பலில் இருந்தவர்கள் படப்பிடிப்பு குழுவினரை கடுமையாக தாக்கினர். “எங்க ஊர் கதையை எப்படி நீ படமெடுக்கலாம்” என்று கூறிக்கொண்டே இயக்குநர் வடிவுடையானின் காரையும் அடித்து நொறுக்கினர். படத்தின் ஹீரோ கரண் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது. தாக்குதல் குறித்து படப்பிடிப்பு குழுவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

Post a Comment