தனியார் செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நமீதா கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால், காய்ச்சலை பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நமீதா பேசமுடியாமல் தடுமாறி, மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். நமீதா உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். Source: Dinakaran
Post a Comment