'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களை அடுத்து 'நந்தலாலா' படத்தை இயக்கினார் மிஷ்கின். இதையடுத்து சேரன் நடிக்கும் 'யுத்தம் செய்' படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஆர்யா நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இது பற்றி மிஷ்கின் கூறியது: ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது படங்களுக்கு கதையை தேர்வு செய்கிறேன். இதுவரை வெளியான 2 படங்களுமே வெவ்வேறு கதைக் களத்தில் உருவானது. அடுத்து ஆர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறேன். முழுக்க ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த படம். இதற்கான கதை தயாராகிவிட்டது. வெளிநாடுகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது.
இப்படத்திற்காக சில ஸ்டன்ட் கலைகளை ஆர்யா கற்க வேண்டியுள்ளது. அவருக்கு பயிற்சி அளிப்பதற்காக ஹாங்காங்கிலிருந்து தற்காப்பு கலை பயிற்சி தரும் மாஸ்டர் வர உள்ளார். படத்தில் முக்கிய அம்சமாக இந்த சண்டைக் காட்சிகள் இடம்பெறும். எனவே இதற்கு முறைப்படி பயிற்சி பெற வேண்டும் என ஆர்யாவிடம் கூறியதும் ஒப்புக்கொண்டார். விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. Source: Dinakaran
Post a Comment