ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?
10/23/2010 1:02:24 PM
10/23/2010 1:02:24 PM
எந்திரரன் மாபெரும் வெற்றி பிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சூப்பர் ஸ்டாரின் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இயக்குநர்களின் பட்டியல் நீண்ட கொண்டே போகிறது. இயக்குநர் மணிரத்னம், ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என அனைத்து இயக்குநர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
இதனையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு ரஜினி சார் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார். ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார். ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.Source: Dinakaran
Post a Comment