9/21/2010 10:45:53 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கீர்த்தியான நடிகைக்கு கைவசம் படங்கள் இல்லையாம்… இல்லையாம்… நடிச்சிட்டிருந்த படங்களும் பாதியில நிக்குதாம்… நிக்குதாம்… இதனால யாராவது, ஃபங்ஷனுக்கு கூப்பிட்டா, உடனே கவர்ச்சி டிரஸ்ல ஆஜர் ஆகுறாராம்… ஆகுறாராம்… பட வாய்ப்பை பிடிக்க, தான் நடிக்காத பட விழாவுக்கும் வர்றாருன்னு பேசிக்கிறாங்க… கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க…
லக லக பார்ட் 2வில் தல நடிகர் நடிப்பாருன்னு கோலிவுட்ல டாக் ஓடுது… டாக் ஓடுது… திடீர்ன்னு ஹீரோவா பிரகாச நடிகர் நடிப்பாருன்னும் சொல்றாங்களாம்… சொல்றாங்களாம்… யார்தான் ஹீரோன்னு லக லக டைரக்டர்கிட்ட கேட்டா, 'அது பற்றி ஆக்டர் திலக கம்பெனிலதான் கேக்கணும்Õனு பதில் சொல்றாராம்… சொல்றாராம்…
பையன் நடிகரு திடீர்னு வெளிநாட்டுக்கு போய் வந்தாரு. ஹாலிடே கொண்டாடத்தான் போனாருன்னு சொன்னாங்க… சொன்னாங்க… ஆனா அது உண்மை கிடையாதாம்… கிடையாதாம்… உடல் எடையை குறைக்க ட்ரீட்மென்ட்டுக்காக அங்கே போய் வந்தாராம்… வந்தாராம்…
Post a Comment