9/14/2010 10:30:08 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஆண்ட்ரிய நடிகைக்கு பட வாய்ப்பு வந்தா ஏற்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… எனக்கு நிறைய பர்சனல் வேலைங்க இருக்கு. கால்ஷீட் ஒதுக்க நேரமில்லைன்னு காரணம் சொல்றாராம்… சொல்றாராம்… நடிக்கிறதுக்கு பதிலா பாட வாய்ப்பு இருந்தா கொடுங்கன்னும் கேட்கிறாராம்… கேட்கிறாராம்…
புது வரவான பிரியமான நடிகைக்கு தமிழ், கன்னடத்துல வாய்ப்புங்க வர ஆரம்பிச்சிருக்காம்… ஆரம்பிச்சிருக்காம்… ஹீரோக்கள், இயக்குனருங்ககிட்ட நட்பா பழகுறாராம்… பழகுறாராம்… இதனால தமிழ்ல முதல் படம் ஓடலேன்னாலும் அடுத்ததா ரெண்டு படங்கள்ல நடிக்கிறாராம்… நடிக்கிறாராம்…
ஹீரோவா நடிச்ச முதல் படம் ரெடியாகி ஒரு வருஷம் ஆயிடுச்சி. ஆனா இதுவரைக்கும் ரிலீசாகல. இத நினைச்சு அஞ்சாத இயக்குனரு, அப்பப்போ வருத்தப்படுவாராம்… வருத்தப்படுவாராம்… இனிமே ஹீரோவா நடிக்கவே மாட்டேன்னு இப்போ முடிவு பண்ணியிருக்கிறாராம்…பண்ணியிருக்கிறாராம்…
Post a Comment