10/12/2010 10:58:14 AM
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 68வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்திப்பட உலகில் இன்றும் முதலிடத்தில் உள்ளவர் அமிதாப் பச்சன். 68 வயாதாகும் இவர் சமீபத்தில் 13 வயது சிறுவனாக நடித்த பா படத்திற்காக தேசிய விருது பெற்றார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிக்கவும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தி திரையிலகினர் பலர் அமிதாப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமிதாப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இமயமலை செல்லும் முன் மும்பை சென்றுள்ள அவர், அமிதாப் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். சில சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
Post a Comment