இது என் படமல்ல,ராம் கோபால் வர்மா படம்-சூர்யா

|

Surya
ரக்த சரித்ரா இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் விவேக் ஓபராயுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள சூர்யாவை, ‘ரோபோ ரஜினிக்குப் பின் இப்போது கஜினி சூர்யா’ கலக்க வருகிறார்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்திருந்தனர் மும்பை பகுதியில்.

வடக்கில் ரஜினிக்கு இருக்கும் பெரும் புகழ், செல்வாக்கு, ரசிகர்களிடம் உள்ள நல்ல பெயரை, அங்கே முதல்முறையாக நடிக்கும் சூர்யாவுக்குப் பயன்படுத்துவதா என்று பல ரஜினி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர்.

ஆனால் முன்னிலும் வேகமாக இந்த விளம்பரங்களைச் செய்ய ஆரம்பித்தனர். விசாரித்ததில், இதைச் செய்பவர் வேறு யாருமில்லை… படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மாதான், எனத் தெரிய வந்தது.

இதனால் ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனத்தை இமெயில் மற்றும் கடிதங்கள் மூலமாக பல ரசிகர்கள் அனுப்பி வைத்தனர்.

இன்னொன்று, அரசியல் தலைவர்களைப் பற்றி படுமோசமான விமர்சனங்களைத் தாங்கி வரும் ரத்த சரித்திரத்தில் அனாவசியமாக ரஜினி பெயரை இழுக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தனர் ரசிகர்கள்.

இந் நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யாவிடன் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், “இப்படத்திற்காக ‘ரோபோ ரஜினிக்கு பிறகு கஜினி சூர்யா’ என்று என்னை ரஜினியுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்தது உண்மைதான்.

இப்போது அதுபோன்ற விளம்பரங்களை நீக்குமாறு கூறிவிட்டேன். ரஜினி பெரிய நடிகர் அவருடன் என்னை ஒப்பிட்டது தவறுதான்.

இந்த படத்தை சிலர் எதிர்க்கின்றனர். இதில் யாரையும் புண்படுத்தவில்லை. இன்னொரு முக்கிய விஷயம், இது சூர்யா படமில்லை. ராம் கோபால் வர்மா படம். எனவே என் படம் என்ற எதிர்ப்பார்ப்பு வேண்டாம்…” என்றார்.

 

Post a Comment