வேலூர் சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள இயக்கநர் சீமானை தமிழ் திரையுலக இயக்குநர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்யராஜ், இயக்குநர் சஹ்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், “நாங்கள் சீமானின் நண்பர்கள். அந்த அடிப்படையில் மட்டுமே அவரைச் சந்தித்தோம். சீமான் கலங்கவில்லை. தைரியமாகவும், ஆரோக்கியமாவும் உள்ளார். இதற்கு முன்பு கோவை மற்றும் மதுரை சிறையில் சீமான் இருந்த போது, நட்பு ரீதியிலும், இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பார்த்துள்ளோம். இது அரசியல் நோக்கம் கொண்டதல்ல,” என்றார்.

Post a Comment