மலையாளப் படத்தில் பாக்.கிரிக்கெட் வீரர்

|

Mohammad Hafeez
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தின் பெயர் மழவில்லினாட்டம் வரே. பிரபலமான மலையாளப் பாடலாசிரியர், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரிதான் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.
அதாவது கதைப்படி ஒரு பாகிஸ்தான் வீரர் கேரக்டர் இப்படத்தில் வருகிறது. இதற்காக முன்பு முகம்மது ஆசிப்பை தேர்வு செய்து வைத்திருந்தார் கைதப்புரம். ஆனால் அந்த நேரம் பார்த்து ஆசிப் ஸ்பாட் பிக்ஸிங் செய்து இங்கிலாந்தில் சிக்கிக் கொண்டார். இதனால் வேறு வழியில்லாமல் ஆசிப்பை கழற்றி விட்டு விட்டார் கைதப்புரம். இதுதான் அந்தப் பின்னணிக் கதை.
இப்போது அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் ஹபீஸ். தற்போது நடிக்க ஆள் கிடைத்து விட்டதால் நவம்பர் 24ம் தேதி வள்ளுவன் கடவு முத்தப்பன் வில்லேஜ் என்ற இடத்தில் வைத்து ஷூட்டிங்கைத் தொடங்குகிறார் கைதப்புரம்.
இப்படத்தில் கபில்தேவும் கூட நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி, மது, அர்ச்சனா கவி, கிருஷ்ணா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனராம்.
 

Post a Comment