சீயானுடன் இணையும் அமலா பால்

|

Amala Paul
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள புதுமுக நடிகை அமலா பால் படு வேகமாக உயரத்திற்கு வந்துள்ளார். முன்னணி நாயகர்களுடன் இணை சேரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
சிந்துசமவெளி படத்தில் அனகா என்ற பெயரில் நடித்தவர் இந்த அமலா பால். ஆனால் சிந்து சமவெளி படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானால் ராசி பார்த்து மறுபடியும் அமலா என்ற ஒரிஜினல் பெயருக்கே வந்து விட்டார்.
அறிமுகமான புதிதிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்திருக்கிறார் அமலா பால்.
சீயான் விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் அவருக்கு ஜோடியாகநடிக்கப் போகிறாராம் அமலா பால். விக்ரமுடன் இணைவது குறித்து பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறார் அமலா.
இதுதவிர மேலும் நான்கு படங்களும் அவருக்கு வந்துள்ளதாம். நான்குமே முன்னணி இளம் நாயகர்கள் படமாம். கதை பிடித்துப் போய் விட்டதால் இவற்றை ஒப்புக் கொண்டுள்ளாராம். அடுத்தடுத்து இந்தப் படங்கள் வெளியாகும் என்பதால் பூரிப்புடன் இருக்கிறார்.
அமலா சத்தமே போடாமல் முன்னணிக்கு வருவதைப் பார்த்து தற்போது அந்த இடத்தில் உள்ள சில நடிகைகள் டென்ஷனாகி வருவதாக கூறப்படுகிறது.
 

Post a Comment