கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, இடுப்பை தொட்டு சில்மிஷம் செய்த ரசிகருக்கு பளார் அறைவிட்டார் ஜெனிலியா. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பெசன்ட் சாலையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு ஜெனிலியா நேற்று வந்தார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். போலீசாரும் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். ஜெனிலியாவை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். முண்டியடித்துக்கொண்டு வந்தனர். ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தபடி நடந்தார் ஜெனிலியா. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர், பாதுகாப்பை மீறி ஜெனிலியாவை நெருங்கி வந¢தார். திடீரென ஜெனிலியாவின் இடுப்பில் கை வைத்தார். அவரது கையை தட்டிவிட்ட ஜெனிலியா, அதே வேகத்தில் அவரது கன்னத்தில் பளார் அறை விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த ரசிகரை போலீசார் கைது செய்து, அழைத்துச் சென்றனர்.
Also Read Genelia D'Souza slapped!
Post a Comment