இலங்கைப் புகழ் அசினும், அவருக்குக் காவலனாக நடிக்கும் விஜய்யும் இப்போது இருப்பது… லாவாஸாவில்!
லாவாஸா?
பூனா அருகே ஸையாத்ரி மலைத் தொடர்களில் அமைந்துள்ள குளுகுளு பிரதேசம்தான் இந்த லாவாஸா. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் இருக்கும் எஃபெக்ட் லாவாஸாவிலேயே கிடைக்குமாம்.
திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் லாவாஸாவுக்கே உண்டு.
இயற்கையின் அழகு கெடாமல் பராமரிக்கப்படும் இந்த மலை நகரில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப் படம் காவலன்தான்.
காவலன் படத்துக்காக வித்யாசாகர் இசையில் உருவான ஒரு அழகான மெலடிப் பாடலை இங்கு வைத்துப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்ப, உடனடியாக லாவாஸா பறந்துவிட்டது காவலன் குழு.
இன்னும் ஒரு வாரத்துக்கு அசின் – விஜய் ஜோடி, லாவாஸாவில் ‘டூயட்’ பாடவிருக்கிறது!
+ comments + 1 comments
vijay vaalga
Post a Comment