நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
எழுத்தாளர் ஒருத்தரு மறைந்த நடிகரை பற்றி தன்னோட புத்தகத்துல குறை சொல்லி எழுதிட்டு இருந்தாராம்… இருந்தாராம்… விஷயத்தை கேள்விப்பட்ட ஆக்டர் திலக வாரிசுங்க, அந்த எழுத்தாளரை கூப்பிட்டாங்களாம். Ôஇப்படியெல்லாம் இட்டுக்கட்டி எழுதக்கூடாதுÕனு அன்பா சொன்னாங்களாம்… சொன்னாங்களாம்… எழுத்தாளரும் நிலைமைய புரிஞ்சுகிட்டு, குறிப்பிட்ட அந்த பகுதியை புக்லேருந்து எடிட் பண்ணிட்டாராம்… பண்ணிட்டாராம்…
சமீப காலமா அதிகமா வெளிய¤ல தலை காட்டாம இருந்தாரு நமி நடிகை. டயட்டை கடைபிடிச்சவரு, உடம்பை குறைச்சிட்டாராம்… குறைச்சிட்டாராம்…. Ôஉடம்பை குறைச்சாலும் முகத்துல காணாம போன இளமையை எப்படி கொண்டு வரப்போறாருÕனு போட்டி நடிகைங்க கிண்டல் பண்றாங்களாம்…
பண்றாங்களாம்…
லவ் சிக்கல்ல இருக்கிறதால வருத்தமா இருக்கிறாராம் டான்ஸ் மாஸ்டரு. தான் இயக்குற படத்தோட பாடல் வெளியீட்டுக்கும் விழா வேணாம்னு சொல்லிட்டாராம். ஹீரோ, ஹீரோயினோடு பட ஆபீசுக்கு வந்தவரு கமுக்கமா கேசட்டை ரிலீஸ் பண்ணிட்டு கிளம்பிட்டாராம்… கிளம்பிட்டாராம்…
Post a Comment