தென்காசி தியேட்டரில் 'மைனா' படத்தைப் பார்த்து ரசித்த விஷால்

|

Vishal
தென்காசி:  தென்காசி திரையங்கில் திரையிடப்பட்டுள்ள மைனா திரைப்படத்தினை நடிகர் விஷால் ரசித்து பார்த்தார்.
தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பாலா இயக்கத்தில் அவன்..இவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நேற்று நடிகர் விஷால் தென்காசி பரதன் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள தீபாவளி வெளியிடான மைனா படத்திற்கு தனது சகாக்களுடன் வந்தார். எப்போதும் மாலை 6.15க்கு படம் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் விஷாலுக்காக 6.45க்கு படம் திரையிடப்பட்டது.
டீசார்ட், ஜீன்ஸ்-பேண்ட், தொப்பி அணிந்து பால்கனியில் ரசிகர்களோடு அமர்ந்து மைனாவை ரசித்து பார்த்த விஷால் படம் முடியும் வரை ரசித்து பார்த்தார். பின் படம் முடிவடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன் இரவு 9.05 அவர், தனது டிரைவர் ஜெய்குமாருடன் பின் வாசல் வழியாக சொகுசு காரில் குற்றாலம்-ஐந்தருவி சாலையில் அவர் தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
விஷாலுடன் ஒரு இளம் பெண்ணும் வந்திருந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. வி்ஷால் மைனா படம் பார்க்க வந்த தகவல் அதன்பின்புதான் தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தெரிய வந்து, ‘அடடா வடை போச்சே’ என்று விஷாலைப் பார்க்க முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டனர்.
 

Post a Comment