காதலுக்கு தடையாக இருக்கும் அப்பா விஜயகுமார் மீது அவரது மகளும் நடிகையுமான வனிதா, போலீசில் திடீர் புகார் கொடுத்துள்ளார்.
மாணிக்கம், சந்திரலேகா உள்பட சில படங்களில் நடித்தவர் வனிதா. டிவி நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர்.
தற்போது தனது 2 குழந்தைகளுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார்.
சமீபத்தில் தீபாவளிக்காக குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் புறப்பட வனிதா தயாரானபோது, குழந்தைகளை அனுப்ப விஜயகுமார் மறுத்துவிட்டாராம்.
இதனால் வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயகுமார் மீது மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்தார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அனுப்பி வைக்க விஜயகுமார் சம்மதித்தார்.
இந்த தகராறுக்கு உண்மையான காரணம், தொழிலதிபர் ஒருவரை வனிதா காதலிப்பதாகவும், அதற்கு விஜயகுமார் தடையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment