தனது முதல் படங்கள் மூலம் ரசிகர்களிடம், வித்தியாசமான இயக்குநர் என பெயர் வாங்கியிருந்தாலும், மைனா படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார் பிரபு சாலமன். இந்த ஆண்டு வெளியான அருமையான படம் என பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசனும், இயக்குநர் பாலாவும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். இப்போது திரையுலகினர் அணிவகுத்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனராம்.
எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது. சில நாட்கள் முன்பு ‘மைனா’ படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ‘இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே’ என்றும் கூறினார். மேலும் மைனா மாதிரி படம், உண்மையான திராவிடர்களின் படம். எப்போதோ பூக்கும் குறிஞ்சிப் பூ இது என்று கூறிய சூப்பர் ஸ்டார், படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், கல்பாத்தி எஸ் அகோரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பாராட்டு கடிதம் ஒன்றை ரஜினி எழுதியுள்ளார். அதில்,
எனக்கு ஒரு சின்ன வருத்தம்: இந்த காவிய படத்துல ரஜினிகாந்த் ஒரு சின்ன பாத்திரத்திலாவது நடிச்சிருக்கலாமேன்னு…!
ஜெய்ஹிந்த்… வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு!
இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
ரஜினியின் பாராட்டு குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், ‘என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத விருது, ரஜினி சார் எனக்குத் தந்த முத்தமும், பாராட்டுக் கடிதமும்’ என்றார், கண்கள் கலங்க.
மைனாவின் முக்கியப் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் தம்பி ராமையா கூறுகையில், “யாருக்கு சார் இந்த மனசு வரும்… ரஜினி சாரின் இந்தப் பாராட்டு நடிகராக எனக்கு கிடைச்ச மிகப் பெரிய அங்கீகாரம்… இதுபோதும்” என்றார்.
Source: Dinakaran
Post a Comment