பேசாமல் சினிமாவை விட்டு விலகி விடலாம் போலிருக்கிறது-காம்னா சலிப்பு

|

Kamna Jethmalani
கவர்ச்சியாக நடித்தால் பெரிய அளவுக்குப் போகலாம் என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இப்போது அதில் இஷ்டம் போய் விட்டது. சில படங்களில் நடித்து விட்டு பேசாமல் சினிமாவை விட்டே விலகி விடலாம் போலிருக்கிறது என்று சலிப்புடன் கூறுகிறார் காம்னா ஜெத்மலானி.
இதயத் திருடன், மச்சக்காரன் என சில படங்களில் நடித்துள்ளார் காம்னா. ஆனால் தமிழில் அவர் ஒரு ஸ்டாராகவே ஆக முடியாமல் போய் விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வந்த அவர் இடையில் தமிழில் சுத்தமாக காணவில்லை. தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தார். அங்கும் இதே கதைதான்.
இப்போது முழு நீள காமெடிப் படம் ஒன்றில் நடிக்க வந்துள்ளார் காம்னா. அதிரடிப் படங்களை இயக்கியவரான திருமலை இயக்கும் முழு நீளக் காமெடிப் படம் காசேதான் கடவுளடா. இதில் நடிக்கிறார் காம்னா.
ஏன் தமிழில் உங்களைக் காணவில்லை, உங்களது கவர்ச்சி நடிப்பு பாலிசி இப்போது எந்தஅளவுக்கு உள்ளது என்று காம்னாவிடம் கேட்டால், பிடித்தவற்றில் மட்டுமே நடிக்கிறேன். இதுவரை 10 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு சினிமா கூட இல்லை.
முதலில் கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற முடிவில் இருந்தேன். இப்போது கவர்ச்சியாக நடிப்பதில் இஷ்டம் இல்லை. ஓரிரு நல்ல படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்று தோன்றுகிறது.
காசேதான் கடவுளடா படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. முழு நீளக் காமெடிப் படம். எனக்கு காமெடி செய்யும் கேரக்டரில் முழுநீள அளவில் நடிப்பது இதுவே முதல் முறை. இப்படம் எனக்கு நல்ல திருப்பத்தைத் தரும் என நினைக்கிறேன் பார்க்கலாம் என்கிறார்.
 

Post a Comment