நடிப்பது ஆனந்தம்,தாயாக இருப்பது பேரானந்தம்:ஹேமமாலினி

|

Hema Malini
சண்டிகர்: நடிகையாக இருப்பதை விட எனது இரண்டு மகள்களுக்கும் தாயாக இருப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
நகை அறிமுக விழாவிற்காக தனது மகள் ஈஷா தியோல் மற்றும் பாலிவுட்டின் அந்நாள் ‘கெட்ட பையனான’ ரஞ்சித்துடன் சண்டிகர் வந்திருந்தார் ஹேமமாலினி.
அப்போது அவர் கூறுகையில், எனக்குப் படங்களில் பலவேறு விதமான கதாபாத்திரங்கள் கிடைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் எனது 2 மகள்களுக்கும் தாயாக இருப்பது தான் பேரானந்தம் என்றார் ஹேமா.
காலத்திற்கேற்ப பாலிவுட்டும் மாறிவருவதாக தாயும், மகளும் தெரிவித்தனர். கதாநாயகன், கதாநாயகி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், வில்லன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழைய நியதி எல்லாம் போய்விட்டது.
தற்போதுள்ள இயக்குநர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை அழகாக படமாக்குகிறார்கள் என்று ஹேமமாலினி கூறினார். தற்போது உள்ளவர்கள் புதிது புதிதாக எதையாவது சோதனை செய்வதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Post a Comment