தனது முதல் படங்கள் மூலம் ரசிகர்களிடம், வித்தியாசமான இயக்குநர் என பெயர் வாங்கியிருந்தாலும், மைனா படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார் பிரபு சாலமன்.
இந்த ஆண்டு வெளியான அருமையான படம் என பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே கமல்ஹாசனும், இயக்குநர் பாலாவும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். இப்போது திரையுலகினர் அணிவகுத்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனராம். நடிகர் விஷால், தென்காசியில் உள்ள தியேட்டருக்குப் போய் படத்தை ரசித்தார். இயக்குநர் லிங்குச்சாமி படத்தைப் பார்த்த பின்னர் தனது வாய் வலிக்கும் வரை பிரபு சாலமனை பாராட்டித் தள்ளி விட்டாராம். அத்தோடு நில்லாமல் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் பிரபுவுக்கு அளித்துள்ளார். அட்வான்ஸையும் கையில் திணித்து விட்டாராம்.
தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும் தீபாவளிக்கு வந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மைனா. மைனாவுக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பால் ஒட்டுமொத்த மைனா டீமுமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.
Post a Comment