'கனிமொழி' படத்துக்கு நேரடி ஒலிப்பதிவு செய்ததால் படத்தின் பட்ஜெட் எகிறியதாக, அதன் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'கனிமொழி' வழக்கமான படம் அல்ல. தொழில் நுட்ப ரீதியாகவும், கதை சொல்லும் பாணியிலும் புதுமையானது. ஹீரோ ஜெய்யின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இது அவருக்கு இன்னொரு தளத்தை கொடுக்கும். ஹீரோயின் ஷசான் பதம்ஸி தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். ஒரு தத்துவத்தின் யதார்த்த பதிவாக இது உருவாகியுள்ளது. படத்தில் யதார்த்தத்தை பேணுவதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நேரடி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக சைலன்ட் ஜெனரேட்டர், சைலன்ட் கேமரா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் கோடி கணக்கில் பணம் செலவானது. நேரடி ஒலிப்பதிவால் தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் படத்தின் தரத்தை உயர்த்த இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
Source: Dinakaran
Post a Comment