கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ்4 நிகழ்ச்சியின் விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க நடிகை பமீலா ஆன்டர்சன், சேலை அணிந்து படு கவர்ச்சிகரமாக வந்தார். லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து திங்கள்கிழமை மும்பை வந்து சேர்ந்தார் பமீலா. விமான நிலையத்தில் அவரைக் காண பெரும் கூட்டம்கூடியதால், கூட்டத்தினர் மத்தியில் பமீலா சிக்கிக் கொள்ள நேரிட்டது. இதையடுத்து மிகுந்த சிரமப்பட்டு அவரை பாதுகாவலர்கள், மிகுந்த பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர்.
43 வயதாகும் பமீலா, பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். இதற்காகவே அவர் மும்பை வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பிக் பாஸ்-4 நடந்து வரும் வீட்டுக்கு அவர் சென்றார். இந்தியப் பெண்கள் அணிவதைப் போல சேலை கட்டி வந்தார். பாலிவுட்டில் குத்துப் பாட்டுக்குப் பெயர் போன யானா குப்தாவுடன் இணைந்து பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தபோது போட்டியாளர்கள் படு வியப்புடன் பமீலாவைப் பார்த்தனர். பெண்களே மயங்கிப் போகும் அளவுக்கு பமீலாவின் கவர்ச்சி கரைபுரண்டோடியது. உள்ளே நுழைந்த பமீலா அனைவரையும் பார்த்து நமஸ்தே என்று சொன்னார். 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கெஸ்ட் ஆக இருப்பார் பமீலா.பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை இன்று கலர்ஸ் டிவி தனது நேயர்களுக்கு ஒளிபரப்பவுள்ளது. பமீலா இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கெஸ்ட் விசிட்டுக்காக அவருக்கு ரூ. 2.5 கோடி பணம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Source: Dinakaran
Post a Comment