ஹாலிவுட் படங்களில் காஸ்டிங் இயக்குனர் என்பவர் தனியாக இருப்பார். படத்தின் கேரக்டர்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது இவரின் பணி. தமிழ் சினிமாவில் இதை இயக்குனர்களே செய்து விடுவதால் அந்த பணிக்கென்று தனியாக யாரும் இருப்பதில்லை.
இப்போது முதன் முறையாக, 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' என்ற படத்தில் காஸ்டிங் இயக்குனராக, 'விருமாண்டி' படத்தில் பேய்காமனாக அறிமுகமான சண்முகராஜன் பணியாற்றுகிறார். டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் படித்த இவர், இந்தப் படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்ததுடன் அவர்களுக்கு ஒரு மாதம் நடிப்பு பயிலரங்கம் நடத்தி இருக்கிறார்.
'காஸ்டிங் இயக்குனர்களை நியமிப்பதன் மூலம் இயக்குனர்களின் பணிச் சுமை குறையும். நடிப்பு பயிற்சியால் படப்பிடிப்பில் டேக்குகள் குறைவதால் நேரமும், பிலிமும் மிச்சமாகும். இதனால் தயாரிப்பாளரின் சுமையும் குறையும். இனி வருங்காலத்தில் காஸ்டிங் இயக்குனர்களின் பணி தவிர்க்க முடியாததாக இருக்கும்' என்றார் சண்முகராஜன்.
Source: Dinakaran
Post a Comment