சுந்தர்.சி, ஜோதிர்மயி நடித்த படம் ‘தலைநகரம்’. இதன் இரண்டாம் பாகமாக ‘நகரம் மறுபக்கம்’ படத்தை நடித்து, இயக்கி வருகிறார் சுந்தர்.சி. முன்பெல்லாம் சுந்தர்.சி இயக்கும் படங்களில் காமெடி அசத்தலாக இருக்கும். கவுண்டமணி, வடிவேலு என்ற அவருடைய காம்பினேஷன் வெற்றி கூட்டணியாக மாறியது. சுந்தர்.சி இயக்கிய கிரி, வின்னர் படங்களாகட்டும், நடித்த தலைநகரமாகட்டும்… இவை வெற்றி பெற்றதற்கு கதையைவிட, ஆக்சனைவிட, காதலைவிட வடிவேலுவின் காமெடிதான் காரணம். சின்ன மனஸ்தாபத்தில் இருவரும் பிரிந்த பிறகு வடிவேலுவின் இடத்தை விவேக் பிடித்துக் கொண்டார்.
சமீபத்தில் அவரது படங்களில விவேக் காமெடி எடுபடவில்லை, இதனால் யோசித்த சுந்தர்.சி மீண்டும் வடி«லுவிடம் சரண் அடைந்துள்ளார். தலைநகரத்தில் நாய் சேகராக வந்த வடிவேலு இந்த படத்தில் ஸ்டைல் பாண்டி-யாக வருகிறார். வடிவேலுவின் ரிட்டர்ன் காரணமாக சுந்தர்.சி இனி விவேக் பக்கம் திரும்புவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்… Source: Dinakaran
Post a Comment