தாம்தூம் படத்தை தொடர்ந்து மீடியா ஒன் குளோபல் மற்றும் மெஜஸ்டிக் மல்டிமீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய படம் சிக்கு புக்கு. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி உலகம் முழவதும் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வெற்றி நாயகனாக உலா வரும் ஆர்யா இப்படத்திலும் சந்தானத்துடன் சேர்ந்து செம கலாட்டா செய்திருக்கிறாராம். எனவே இந்த படமும் பாஸ் போலவே மக்கள் மதிப்பீட்டில் பாஸ் ஆகும் என்கிறார் டைரக்டர் மணிகண்டன்.
Post a Comment