'காந்தர்வன்’ பட ஷூட்டிங்கில் ஹீரோ கதிர் காயமடைந்தார். இது பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியது: காட்சிப்படி காதலன் கதிரை ஏமாற்றுவதற்காக தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாக ஹனிரோஸ் கூறுவார். நண்பர்களுக்கு முன்பு தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கதிர் குமுறுவார். உடனே எதிரே இருக்கும் கண்ணாடியில் ஹனிரோஸ் முகம் தெரியும். கையால் கண்ணாடியை உடைக்க வேண்டும். இதில் சிதறிய கண்ணாடிகள், கதிரின் கைகளை குத்தி கிழித்தன. உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு 12 தையல் போடப்பட்டது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
Source: Dinakaran
Post a Comment