படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமாக கலைஞர் டிவி உள்ளிட்ட சேனல்கள் இருக்க, மன்மதன் அம்பு நிகழ்ச்சி உரிமையை விஜய் டிவிக்குக் கொடுத்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில், மிகப் பெரிய சொகுசு கப்பலில் 2 தினங்கள் நடக்கும் மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.
விழாவில் கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 20-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் விஜய் டிவியோ, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இதற்கான முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்புகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
7000 பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் – தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும், ஏராளமான பிரேசில் மற்றும் சீன கலைஞர்களுடன் இணைந்து பாடுகின்றனர்.
Post a Comment