'ஒல்லியான உடல்தான் என்னுடைய இமேஜ். அவ்வளவு சீக்கிரம் பாடி ஷேப் மாற்ற மாட்டேன்Õ என்கிறார் தனுஷ். அவர் கூறியதாவது:
‘உங்களுடன் நடிக்க வந்தவர்கள் உடல் ஷேப் மாற்றி குண்டாகி விட்டார்கள். நீங்கள் ஏன் வெயிட் போடவில்லை. சிக்ஸ் பேக் உடலுக்கு மாறவில்லை’ என்றெல்லாம் கேட்கிறார்கள். தனுஷ் என்றாலே ஒல்லியான தோற்றம்தான் ஞாபகத்துக்கு வரும். என்னதான் நிறைய சாப்பிட்டாலும் எனது தோற்றத்தில் மாற்றம் வராது. சாப்பிடுவதற்கு ஏற்ப உழைத்து விடுவதும் அதற்கு காரணம். இதைத்தான் வரவேற்கிறார்கள். உடலை ஏற்றும் எண்ணம் கிடையாது.
Source: Dinakaran
Post a Comment