ஆர்.கே. நடிக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு!

|

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL1w1qYYwAQOaGhezIOLWXuz5jHD0hF0lsVXdrlz_0dI_vRTxHyzuY3cjtH01pwJ2VjoltlZko7aRGm05VCB1_ipiRIkt38TeQzxRzb1fjFtGQRhD8y4-D6OPUizOptZAxILT-Mm-i9-kP/s1600/rk_tamil_actor_puli_vesham_movie_stills_01.jpgஎல்லாம் அவன் செயல் படத்திற்கு பிறகு டைரக்டர் ஷாஜி கைலாஷ்- ஆர்.கே. மீண்டும் இணையும் படத்திற்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என ‌பெயர் சூட்டியுள்ளனர். கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி, வெளிவந்து வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு இது. ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்து முறையாகப் பெறப்பட்டுள்ளது. இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட அப்தக்சப்பன் படத்தின் மூலக் கதையைத் தழுவி இப்புதிய படம் உருவாக்கப்படுகிறது.

நேர்மை, யதார்த்தம் மிக்க ஒரு காவல் அதிகாரியின் கதை கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் மொத்த கதையும். இந்த படத்திற்கு போக்கிரி பட புகழ் வி.பிரபாகர் திரைக்கதை - வசனம் எழுதுகிறார். ஆஹா படத்தின் நாயகன் ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் அதிரடி வில்லனாக வருகிறார். மலையாள வில்லன் நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன், யுவராணி, சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கின்றனர். நாயகியாக மதுரிமா அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே தெலுங்குப்படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

சென்னை, புதுச்சேரி மற்றும் கோவாவில் படப்படிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். வெளிநாடுகளிலும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
 

Post a Comment