இயக்குநர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமன்!

|

Director Vikraman
சென்னை: திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் இயக்குநர் விக்ரமன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 1,200-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா இருந்து வருகிறார். துணைத் தலைவராக விக்ரமன் இருந்தார்.
செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக எழிலும் இருக்கிறார்கள்.
இயக்குநர்கள் சங்கத்துக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் விக்ரமன் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அவர், செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு அனுப்பி இருக்கிறார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக, விக்ரமன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சங்கத்தின் பொருளாளராக இருந்த இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனும் இதே போல திடீரென்று பதவி விலகியது நினைவிருக்கலாம்.
இயக்குநர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய விழா தொடர்பான கருத்து மோதல்களும் இந்த ராஜினாமாக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

Post a Comment