அமெரிக்க திரைப்பட சங்கத்தின் (மோஷன் பிக்சர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் அமெரிக்கா) சிறப்பு அழைப்பை தொடர்ந்து, ஹாலிவுட் திரையுலகுடன் இந்திய திரையுலகம் இணைந்து செயல்பட மற்றும் பொருளாதார ஒப்பந்தம் செய்ய, இந்திய திரையுலகம் சார்பில் குழு சென்றுள்ளது. ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் தலைமை தாங்கி, குழுவினரை அழைத்து சென்றார். பாலிவுட்டில் இருந்து தயாரிப்பாளர் பாபி பேடி கலந்து கொள்கிறார். ஹாலிவுட்&இந்திய திரையுலக வர்த்தக ஒப்பந்தம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆண்டோனியோ வில்லாரை கோஸா முன்னிலையில், பாரமவுன்ட் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.
Source: Dinakaran
Post a Comment