ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான் :அபிஷேக் பச்சன்

|

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1999.jpg

உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். சன் பிக்சர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'எந்திரன்' படத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தனர். சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் – ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார் கரண் ஜோஹர்.

அதற்கு, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்றார் அபிஷேக்! தொடர்ந்து அவர் கூறுகையில், “ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்… இவர்களின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்” என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment