‘டான்’ ஷாருக்கும், நான்கு அழகிகளும்!

|

Sharukh Khan
ஒரே நேரத்தில் நான்கு உலக அழகிகளுடன் இணையும் ஷாருக் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் புதிய சாதனை படைக்கவுள்ளார். ஒரே நேரத்தில் நான்கு முன்னாள் உலக அழகிகளுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக்கில் ஷாருக் கான் நடித்து பெரும் ஓட்டம் ஓடியது அப்படம். இப்போது அதன் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
இப்படத்தில் ஷாருக் கானுக்கு லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் உலக அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னும் கெஸ்ட் ரோலில் படத்தில் காட்சி தரப் போகிறார்கள்.
இப்படி ஒரே படத்தில் நான்கு முன்னாள் அழகிகள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். நான்கு உலக அழகிகளுடன் ஜோடி போட்டு நடித்த முதல் நடிகர் என்ற பெயரும் ஷாருக் கானுக்கு வரப் போகிறது.
டான் படத்தை விட மிகப் பிரமாண்டமாக இந்த டான்-2 இருக்கும் என்கிறார்கள்.
டான் படத்தைத்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா என்று மாற்றி எடுத்தனர். சமீபத்தில் அதை அஜீத் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இப்போது பில்லா 2ம் பாகத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 

Post a Comment