கணவன்-மனைவிக்கிடையே எழும் சந்தேகத்தால் நடக்கும் விளைவுகளை சொல்லும் த்ரில்லர் படமாக உருவாகிறது 'யுகம்'. இதுபற்றி இயக்குனர் பவன் சேகர் கூறியதாவது: என் நண்பரின் வாழ்வில் நடந்த உண்மை கதை. நிஜத்தில் அதன் முடிவு வேறுவிதமாக இருந்தது. இதனால் படத்திற்காக கிளைமாக்ஸ் மாற்றிவிட்டேன். ராகுல் மாதவ் ஹீரோ, தீப்தி ஹீரோயின். இருவருமே காட்சிகளை புரிந்துகொண்டு நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடும். காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று யோசித்தபோது ஸ்பாட்டில் ஒரு யோசனை தோன்றியது. கோபமாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஹீரோயினை தாக்குவதுபோல் காட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஹீரோவிடம் கூறினேன். காட்சி தொடங்கியதும் ராகுல், தீப்தி இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே ராகுல் திடீரென தீப்தியை தாக்க பாய்ந்தார். சற்றும் எதிர்பாராத தீப்தி அதிர்ச்சியில் உறைந்துபோனார். இக்காட்சி தத்ரூமாக இருக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே இது பற்றி
தீப்தியிடம் சொல்லவில்லை. காட்சி முடிந்து சில நிமிடம் அவர் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறவேண்டியாதாகிவிட்டது.
தீப்தியிடம் சொல்லவில்லை. காட்சி முடிந்து சில நிமிடம் அவர் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறவேண்டியாதாகிவிட்டது.
Source: Dinakaran
Post a Comment