12/29/2010 11:36:39 AM
'ரெட்டச்சுழி' படத்தில் ராணுவ வீரராக நடித்தவர் ஆரி. இவர், 'தரணி' படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகிறார். ராம்கோபால் வர்மா உதவியாளர் குகன் இயக்கும் இந்தப் படத்துக்காக, 15 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இதுகுறித்து ஆரி கூறியதாவது: மற்ற கலைஞர்களின் எடையை கூட்ட, குறைக்க, ஆலோசனை சொல்லும் நியூட்ரிஷியனாக இருக்கும் நான், இந்தப் படத்துக்காக 15 கிலோ எடையை குறைத்துள்ளேன். முதல் படத்தில் ராணுவ வீரராக நடித்தாலும் ஆக்ஷனுக்கு அதிக வாய்ப்பில்லை. 'தரணி' பக்கா ஆக்ஷன் படம். குகன் தன் குருநாதர் பாணியில் இயக்கி வருகிறார். எனது உயரமும் உடல்வாகும் ஆக்ஷன் படத்துக்குப் பொருத்தமாக இருந்தாலும் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிப்பதையே விரும்புகிறேன்.
Post a Comment