ராமராஜனை சந்திக்க மறுத்த நளினி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராமராஜனை சந்திக்க மறுத்த நளினி!

12/14/2010 1:38:36 PM

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் நடிகர் ராமராஜன் கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டிச் சென்ற சம்பவ இடத்திலேலே பலியானார். ராமராஜன்,மற்றும் அவரது உதவியாளர்  தாஸ்  காயத்துடன் உயிர் தப்பினர். மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார். ராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.

தற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.

இருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.


Source: Dinakaran
 

Post a Comment