மனைவி ரம்லத்துடன் பிரபுதேவா திடீர் உடன்பாடு
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர்கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி ஐ.பாண்டுரங்கன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தார்.
விவாகரத்து கோரி பிரபுதேவா புதிய மனு
நயன்தாரா மீதான வழக்கு வாபஸ் பிரபுதேவாவும் ரம்லத்தும் மனமுவந்து விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ததால் ரம்லத் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அதனால் ஜனவரி மாதம் நயன்தாராவும் பிரபுதேவாவும் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை.
Prabhu Deva-Ramlath Divorce on Mutual Consent with alimony
நடிகர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர். நயன்தாராவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தருமாறு பிரபுதேவாவின் மனைவி லதா (எ) ரமலத், குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர், பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும். இருவரும் சேர்ந்து பேட்டியளிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த 2 மனுக்கள் மீதும் நடக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபுதேவாவும் ரம்லத்தும் நேற்று குடும்ப நல நீதிமன்றத்துக்கு திடீரென வந்து, தாங்கள் இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருகிறோம் என்று மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரியவர்கள் கூறிய அறிவுரையின்படி இருவரும் மனமுவந்து இந்த மனுவை தாக்கல் செய்கிறோம். இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருவதால் ரம்லத், பிரபுதேவா இடையே சொத்து பிரிவினைக்கு சம்மதிக்கப்படுகிறது. அதன்படி, ரம்லத்துக்கு 2 இனோவா கார்கள், அண்ணா நகரில் உள்ள 3440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து 1000 சதுர அடி நிலம் ஆகியவற்றை விற்பனை ஒப்பந்தம் செய்து தர வேண்டும். மேலும், ரம்லத்துக்கு ரூ5 லட்சத்தை பிப்ரவரி மாத முடிவுக்குள்ளும், மேலும் ரூ5 லட்சத்தை விவாகரத்து கிடைக்கும் நேரத்திலும் தர வேண்டும்.ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர்கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி ஐ.பாண்டுரங்கன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தார்.
விவாகரத்து கோரி பிரபுதேவா புதிய மனு
நயன்தாரா மீதான வழக்கு வாபஸ் பிரபுதேவாவும் ரம்லத்தும் மனமுவந்து விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ததால் ரம்லத் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அதனால் ஜனவரி மாதம் நயன்தாராவும் பிரபுதேவாவும் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை.
Source: Dinakaran
Post a Comment