12/27/2010 2:07:02 PM
மீனாட்சி கூறியது: புத்தாண்டு முதல் அசைவம் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். முழுமையாக சைவத்துக்கு மாறிவிடுவேன். கடந்த 2 வருடமாகவே அசைவம் சாப்பிடுவதை கைவிட முயன்று வருகிறேன். ஆனாலும் ஏதாவது ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு முதல் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதை உறுதியாக பின்பற்றுவேன். இது எனக்கு நானே எடுத்துக்கொள்ளும் சத்தியம். 'இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?Õ என்கிறார்கள். சைவ உணவுதான் உடலுக்கும், அறிவுக்கும் மிக நல்லது. உடலுக்கு தேவையான எல்லா சத்தும் சைவ உணவிலேயே இருக்கிறது. அசைவம் சாப்பிடுவதால் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு எழுகிறது. நமது பசிக்காக ஒரு உயிரை கொல்கிறோமே என்ற உணர்வு மனதை உறுத்துகிறது. எனது வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்க விரும்புவேன். நாய்க்குட்டி வாங்கி தரும்படி என் அம்மாவிடம் கேட்பேன். ஆனால் ஷூட்டிங் என்று வந்துவிட்டால் நான் அவற்றை கவனிக்க மாட்டேன் என்று எண்ணி வாங்கி தரமாட்டார். தொந்தரவு தாங்க முடியாமல் நாய்க் குட்டிக்கு பதிலாக கோழி குஞ்சுகளை வாங்கித் தருவார். அவை வளர்ந்தபிறகு யாரிடமாவது கொடுத்து விடுவேன். பிறகு மீண்டும் கோழி குஞ்சு வாங்கித் தருவார். அவற்றிடம் கொஞ்சி விளையாடுவேன். அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறுவதற்கு இதுவும் முக்கிய காரணம்.
Post a Comment