12/17/2010 2:24:27 PM
விரைவில் பிரபல நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து டான்ஸ் ஸ்கூல் தொடங்குகிறார் நமீதா. இதற்காக சென்னை நகரையொட்டி பசுமையான மரங்கள் சூழ்ந்த இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார். 'நான் சூப்பரா டான்ஸ் ஆடுவேன்னா, யாரும் நம்ப மாட்டாங்க. சினிமால என்கிட்டேருந்து கிளாமரான மூவ்மெண்ட்ஸ் மட்டும்தான் எதிர்பார்த்தாங்க. அதனால டான்ஸ் ஆடுறதுக்கு வாய்ப்பில்லாம போச்சு. சின்ன வயசுலேருந்து இப்ப வரைக்கும் கிளாசிக்கல் டான்ஸ் கத்துக் கிட்டிருக்கேன். வீட்டிலேயே பிராக்டீஸ் பண்ணிட்டும் இருக்கேன். வடக்கத்திய நடனத்துடன் பரதத்தையும் கத்துக் கொடுக்கும் ஸ்கூலை நடத்த ஆசை. அதற்கான முயற்சியில இருக்கேன். என்னால மட்டும் பண்ண முடியாது. அதனால ஒரு பார்ட்னரோட பண்ணலாம்னு இருக்கேன்' என்கிறார் நமீதா.
Post a Comment